Tuesday, February 05, 2008

காற்றாடி

முடிவறியா நீல வானிலே
காற்றாடியாய் நான்...

கீழிருந்து ஆட்டிப் படைக்கும் நீ
என் காதல் கன்னி மான்

காற்றாக என் உறவுகளும்
நூலாக நம் காதலும்

காதலின் ஒரு முனையில் நீயும்
மறு முனையில் நானும்

என்னை உயர்த்துவதில் முனைப்பாய் நீ
நம் இடைப்பட்ட தூரம் பெருகுவதும் அறியாமல்...

உலகெல்லாம் என்னை காணச் செய்தாய்
உலகாளும் மமதை கொண்டேன்

காதலின் மேல் முனையில் நானும்
கீழ் முனையில் நீயும்

இன்னும் என்னை உயர்த்திக்கொள்ள நான் விழைகையில்
தடையாய் நம் காதல்

நூல் தீர்ந்ததென்று கை விட்டாய் என்னை
இப்பொழுது காற்று சொன்னபடி ஆடுகிறேன்...

உனக்குத் தான் முதல் அழைப்பிதழ்
மனைவியாகப் போகிறாள் என் முறைப்பெண்
வாழ்த்த வருவாயா?

Labels: ,

4 Comments:

Blogger Harini said...

உலகம் தன் கீழே என்ற மமதையாம்
உறவுகள் போதுமோ என்ற எளனமாம்
கன்னி மான் கைகள் அறுக நூல் விட்டதாம்
காற்றாடி அறுத்துக் கொண்டு இன்னும் மேலே பறந்ததாம்

ஏன் இவ்வளவு குரூரம் கன்னி மானின் மேல் ராம்?

Thursday, February 21, 2008 10:39:00 AM  
Blogger Ram said...

இயலாமை என்பதா? அறியாமை என்பதா?
காலத்தை சாடவா? உனையெண்ணி வாடவா?
முன்பனியில் வெப்பமூட்ட எரிந்தவன் - இன்று
குரூரத் தீயாய் உலகத்தின் பார்வையில்.

கன்னி மானின் மேல் எள்ளளவும் கோபமில்லை, ஹரிணி!

Tuesday, April 15, 2008 9:24:00 PM  
Blogger Harini said...

மனம் போன போக்கில் மிதந்து கொண்டிருக்கும் காற்றாடிக்கு
அறியாமையால் வந்த வேகத்தை மறைக்க
இயலாமை என்ற போர்வை தேவைப்பட்டதோ?

பார்க்கப்போனால் எனக்குத்தான் காற்றாடியின் "self-pity" யின் மேல் ரொம்ப கோபம். ரொம்ப அழகா எழுதி இருக்கேள்! இப்போ ரெண்டாவது தடவை படிக்கரச்சே இன்னும் அழகா தோணித்து. இன்னும் நிறைய எழுதவும்!

Thursday, April 17, 2008 9:21:00 AM  
Blogger Ram said...

நன்றி, ஹரிணி. முயற்சிகள் தொடரும் :)

Monday, April 21, 2008 4:01:00 PM  

Post a Comment

<< Home