நிருபமா
நிருபமா...
வந்தாய் என் வாழ்வில் பெரும் திருப்பமாய்
இனி நீயே என் கவிகளுக்குக் கருவம்மா
சின்னஞ்சிறு பொன் மின்னும் உருவமாய்
இனி உலகத்தோர் உள்ளத்தை கவரம்மா
கண்ணே நீ சிரிக்கின்ற சிற்பமா?
இல்லை ஏழுலகின் ஒட்டுமொத்த விருப்பமா?
அழுதிடினும் ஏது உன்மேல் வெறுப்பம்மா?
உன்னைக் கண்போல காப்பது என் பொறுப்பம்மா