Friday, April 14, 2006

முதல் மூச்சு

காத்திருப்பதும் சுகம்தான்.

கோடையில் வதைந்து விதை விதைக்கும் உழவன் பொறுமை மறந்தால் பருவ மழை வருகையில் மகிழ்ச்சி காண முடியுமோ?
அதே உழவன் தைக்குக் காத்திராமல் விரைப்பில் அறுவடை செய்வானெனில் அனைவருக்கும் விரயம்தானே?
பூமித்தாயின் பொறுமை கொண்டு பத்துத் திங்கள் காத்திருப்பதால் தானே ஈன்ற பேறு அடைகிறாள் பூமியினும் மேலான தாய்?
பதினைந்து நீண்ட இரவுகள் காத்திராவிடில் அமாவாசை இருட்டு பௌர்ணமி வெளிச்சம் ஆகுமோ?

இங்கே தமிழிலும் பதிக்க முடியும் என்று வெகுநாட்களாகவே தெரிந்திருந்தும், என் புண்ணிய பூமியின் புத்தாண்டு தினத்தன்று இந்த இணைய தளத்திற்கு பிறப்பளிக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்த எனக்கும் எல்லையில்லா ஆனந்தம்தான். இங்கே மென்மேலும் பல பதிப்புகள் செய்து என் உள்ளத்து ஆவலை பூர்த்தி செய்துகொள்வேன் என்று நம்புகிறேன்.

வாழ்க தமிழ்! வளர்க வையகம்!