Tuesday, December 12, 2006

மறக்க மனம் கூடுதில்லையே

"தேவர் மகன்" திரைப்படத்தை சற்று முன்புதான் பார்த்து முடித்தேன். இரண்டு மணி முப்பத்தெட்டு நிமிட நீளமுடைய படம் அது. கடைசி இருபத்து மூன்று நிமிடங்களே மிச்சம் இருந்ததால் இன்று முடித்து விடலாம் என்று பார்க்கத் தொடங்கினேன். அதுவரை சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக ஒன்றும் இல்லை திரைப்படத்தில். சிவாஜியின் அபாரமான முகபாவங்களும், கமலின் குறைவற்ற நடிப்பும் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது போல் இருந்தது. ஏற்கனவே பார்த்த படம்தான் என்றாலும் மனம் இன்னும் ஏதோ ஒன்றை வேண்டியது.

வந்தது கடைசிக் காட்சி...

நாசரின் தலை மண்ணில் கிடக்க, கொலை செய்துவிட்ட குற்ற உணர்வினால் கமல் அழும் காட்சி. என்னால் திரையிலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை! இன்னொரு நடிகன் இவ்வளவு உருக்கமாக நடித்திருக்க முடியாது! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சிறப்பான நடிப்பு.

கௌதமியின் "சக்தி"யிலிருந்து கிராமத்து மக்களின் "சக்திவேல் தேவன்" ஆக உருமாறுவதை மற்ற நடிகர்கள் வாயைப் பிளந்து பார்க்கத்தான் முடியும் என்றால், கிளைமாக்சில் கமலின் நடிப்பைப் பார்த்து கைதட்டிவிட்டுச் செல்ல வேண்டியதுதான்!

இரண்டு மணி முப்பத்தைந்து நிமிடங்கள் தந்த ஏக்கத்தை கடைசி மூன்று நிமிடங்கள் போக்கி விட்டன! நடிப்பின் சிகரத்தின் முன் என் சிரம் சாய்க்கிறேன்!

Labels: ,