Monday, June 09, 2008

பாதி

உன்னைக்கண்ட நாளே உறுதி கொண்டேன்
என் வாழ்வின் சரி பாதி நீயென்று
கைப்பிடித்து தீச்சுற்றி
ஊர்கூட மாலை மாற்றி
உன் பாதியைப் பெற்றேன்
என் பாதிக்கு மாறாய்

நம் காதல் அகராதி - அதில்
சிறப்பு வார்த்தையாய்ப் "பாதி"

இனிதாய்க்கழிந்தன சிற்சில வருடங்கள்
பொங்கிப்பெருகின பற்பல செல்வங்கள்
பெற்றோர் ஆனோம் பெருமகிழ்ச்சி கொண்டோம்
சுற்றமும் சூழலும் போற்றிட வாழ்ந்தோம்

இருண்ட வானில் மின்னலாய் ஜொலித்தோம்
கனவிலும் கணிக்கவில்லை நான் -இப்படி
பகல்வானில் பேரிடி விழுமென்று

நீ பாதி நான் பாதி என்றவனை
அதிகம் சுமக்க வைத்த்தாய் நீ
சிரித்துக்கொண்டு சுமந்தேன்

வாடும் மனதிடம் வஞ்சமுரைத்தேன்- பாதியென்று
நம்பவைத்து மேலும் பொதியேற்றினேன்

காதல்- ஆம்
என்றோ உன்னைக் காதலித்ததாய் ஞாபகம்!
வழித்துணையாய் வருவாயென நினைத்தவனை
வழி நெடுக முள் தூவி நடக்கச் செய்கிறாய்

விட்டுச்செல்ல மனமில்லை- எனினும்
கொட்டித்தீர்க்கத் துணிந்து விட்டேன்
நம் பொதுச்சுமைகளைச் சுமப்பதில்
நீ பாதி நான் பாதி அல்ல
நீ கால், நான் முக்கால்!

எள்ளி நகையாடுகின்றாய் - என்
உள்ளக்கொதிப்பினைக் கண்டு
"பத்தில் ஐந்தை வேண்டாம்- ஒன்றை
சுமந்திருக்கலாமே" என்பதுபோல்...

Labels: ,