களங்கமில்லா வெண்ணிலவும்
சுட்டெரிக்கா கதிரவனும்
வாடிவிடா மலரினமும்
வாசமிக்க நன்னீரும்
இல்லாமல் செய்ததது
இறைவனவன் தன்குற்றம்
சினங்கொண்ட உள்ளமதும்
புறம்பேசும் வாயதுவும்
வெட்கிநிற்கும் பார்வையதும்
வீழ்ச்சிகாணும் மானமதும்
இல்லாமல் செய்வதுவே
இப்பிறப்பின் உள்ளர்த்தம்
Labels: poetry, கவிதைகள்